ஏன் தெரியுமா ? தளபதி விஜய்க்கு நன்றி சொல்லிய மார்க் ஆண்டனி படக்குழு!

 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீசாகியுள்ளது மார்க் ஆண்டனி. டைம் டிராவலை மையமாக கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் இருவேறு காலகட்டங்களை வெளிப்படுத்தும் வகையில் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளனர். படத்தில் ரிது வர்மா, அபிநயா, செல்வராகவன் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். 

 சர்வதேச அளவில் மூன்று மொழிகளில் மார்க் ஆண்டனி படம் வெளியாகியுள்ளது. 

மார்க் ஆண்டனி படம் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.இதனிடையே இந்தப் படத்தின் டீசரை முன்னதாக வெளியிட்டிருந்த நடிகர் விஜய்க்கு படத்தின் டைட்டிலில் நன்றி தெரிவித்து கார்ட் போடப்பட்டுள்ளது விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் படத்தின் நிகழ்வுகளை அறிமுகப்படுத்தும்வகையில் நடிகர் கார்த்தியின் பின்னணி குரலும் படத்தின் வெற்றிக்கு மிகச்சிறப்பான வகையில் துணை புரிந்துள்ளது.