அந்தகன் படத்தில் பிரசாந்திற்கு கண் தெரியுமா? தெரியாதா? தியாகராஜன் கொடுத்த பதில்..!

 
நடிகர் பிரஷாந்த் தந்தையான தியாகராஜாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் நடித்துள்ளார் பிரசாந்த். அவருடன் சிம்ரன், சமுத்திரக்கனி ,பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நீண்ட நாட்களாகவே இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வந்த நிலையில் பல காரணங்களினால் தள்ளிப்போனது. ஆனால் தற்போது ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் இடம்பெற்ற டெய்லர் வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு இடம் பெற்றது. அதில் பத்திரிக்கையாளர் ஒருவர் பிரசாந்துக்கு கண் தெரியுமா தெரியாதா என கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளித்த தியாகராஜன் அதுதான் இந்த படத்தின் டுவிஸ்ட் என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இந்த படத்தில் பிரசாந்த் கண் தெரியாதவராக நடிப்பதற்காக மேற்கொண்ட உத்திகள் குறித்தும் பேசியுள்ளார். மேலும் குறித்த சந்திப்பில் கோட் படத்தின் கேள்விகளை தவிர்க்குமாறும் ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.