நிவாரண பொருட்கள் வேண்டாமா? என்று விஜய் கேட்க... வேணாம் என கூறிய ரசிகை...
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் இதில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக நேற்று நெல்லை சென்ற விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னுடைய கையால் நிவாரண பொருட்களை வழங்கினார்.
அப்போது ஒரு ரசிகை, விஜய்யின் காலில் விழுந்து வணங்கிய பின்னர், விஜய் நிவாரண பொருட்களை கொடுக்க முயன்றார். அவர் உங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கூற உடனே நிவாரண பொருட்களை அருகில் வைத்து விட்டு செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார்.செல்பி எடுத்தவுடன் அந்த ரசிகை கிளம்பிய போது நிவாரண பொருட்கள் வேண்டாமா? என்று விஜய் கேட்க , ‘வேண்டாம் உங்களுடன் செல்பி எடுத்தால் மட்டும் போதும்’ என்று கூறி கூற, ’சரி ஓகே போங்க’ என்று விஜய் கூறிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.