மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ஈஸ்வரி..பாக்யா கொடுத்த பதிலடி!
இன்றைய பாக்கியலட்சுமி சீரியலில் ஹோட்டலை எல்லாம் அடைத்துவிட்டு அவள் வீட்டுக்கு வருவதற்கு 12 மணி ஆகிறது. ஈஸ்வரி ஹாலிலே உட்கார்ந்து மருமகளை திட்டுவதற்கு ரெடியாக இருக்கிறாள். பாக்யா வந்து கேட்டை திறக்க உள்ளே பூட்டி இருக்கிறது. காலிங் பெல்லையும் ஆஃப் பண்ணி வைத்திருக்கிறாள். பாக்யா சத்தம் போட்டு கூப்பிட, ஈஸ்வரி வேண்டுமென்றே கதவை திறக்காமல் இருக்கிறாள்.
அந்த சமயத்தில் எழில் எதார்த்தமாக அம்மா வந்துட்டாங்களா எனக்கேட்டு வருகிறான். ஈஸ்வரி வரவில்லை என்று பச்சை பொய் சொல்கிறாள். எழில் நான் பார்த்துட்டு வர்றேன் என சொல்லி வெளியே போக, பாக்யாவின் சத்தம் கேட்கிறது. அவசரமாக வந்து கதவை திறக்க, நம்ம வீட்ல கேட்டை பூட்ற பழக்கமே இல்லையேடா. யார் கதவை பூட்டுனது என கேட்கிறாள். தெரியலம்மா கேட்டை தட்டி சத்தம் கொடுத்து இருக்கலாம்ல என எழில் கேட்க, ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டு தான் இருக்கேன் என்கிறாள்.
அதனை தொடர்ந்து பாக்யா உள்ளே வந்ததும் குடும்ப பொம்பள எத்தனை மணிக்கு வீட்டுக்கு வர என பிரச்சனையை ஆரம்பிக்கிறாள் ஈஸ்வரி. அதற்கு பாக்யா ஏற்கனவே எனக்கு டயர்டா இருக்கு அத்தை. இப்போ உங்ககிட்ட குடும்ப பொம்பளைன்னு என்னால நிரூபிக்க முடியாது என சொல்லிவிட்டு படுக்க போய் விடுகிறாள். அதன்பின்னர் மறுநாளே வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிட்டு கோபியையும் வர வைத்து பஞ்சாயத்தை ஆரம்பிக்கிறாள்.
நீ அவள்கிட்ட பேசு என கோபியிடம் சொல்கிறாள் ஈஸ்வரி. அதனை தொடர்ந்து பாக்யாவை சத்தம் போட்டு கூப்பிட, அவள் நாலரை மணிக்கே ஹோட்டலுக்கு கிளம்பி போய்விட்டதாக அமிர்தா சொல்கிறாள். அப்போதும் ஈஸ்வரி விடாமல் போன் போட்டு அவளை வர சொல்லு என்கிறாள். அதற்கு கோபி, பிசினஸ் பண்ணும் போது முன்னபின்ன இருக்கத்தான் செய்யும். நீங்க ஏதோ அவசரம் சொல்லி தான் வந்தேன். எனக்கு கிச்சன்ல ஆயிரம் வேலை இருக்கு. நான் கிளம்புறேன் என சொல்லிவிட்டு போய் விடுகிறான்.
அதன்பின்னர் காலையில் சாப்பிடும் போது அமிர்தாவின் சமையலை அனைவரும் பாராட்ட, ஈஸ்வரி சாப்பாடு நல்லாவே இல்லை என பிரச்சனையை ஆரம்பிக்கிறாள். அப்போது ஜெனி ஆண்ட்டி மேல இருக்க கோபத்தை அமிர்தா மேல காட்டாதீங்க என சொல்ல, அதெல்லாம் கிடையாது. சாப்பாட்டுல உப்பே இல்லை என அமிர்தாவை திட்ட தீர்க்கிறாள்.
இந்தப்பக்கம் பாக்யா கடை ஓனரை வர வைத்து கவுன்சிலர் பண்ண பிரச்சனை பற்றி சொல்கிறாள். நீங்க தான் அவர்க்கிட்ட பேசனும் என சொல்ல, கடையை உங்ககிட்ட ஒப்படைச்சுட்டேன். இனிமே நீங்கதான் எல்லாத்தையும் பார்த்துக்கனும் என சொல்லி ஷாக் கொடுத்து விடுகிறான். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் நிறைவடைந்தது.