பாரதி கண்ணம்மாவை காப்பி செய்யும் ஈரமான ரோஜாவே சீரியல்..!!
 

அடுத்த பாரதி கண்ணம்மா பார்ட் 2 போல ஈரமான ரோஜாவே கதை நகர்ந்து வருவதாக புதிய ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் பிரபலமான ஒன்று ஈராமான ரோஜாவே சீசன் 2. இதில் சித்தார்த், கேப்ரியல்ல, திரவியம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சூழ்நிலை காரணமாக தங்கை திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்படுகிறது. அதேசமயத்தில் தங்கையில் காதலனை அக்கா திருமணம் செய்துகொள்கிறாள். இருவரும் ஒரே வீட்டின் மருமகளாக வசிக்கத் தொடங்கும் நிலையில், அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் தான் ஈரமான ரோஜாவே 2-வின் கதைக்களம்.

ஆனால் எல்லாம் சரியாக இரண்டு சகோதிரிகளும் தங்களுடைய கணவரிடம் சகஜமாகி திருமண பந்தத்தில் இணைந்து வாழ்ந்து வரும் வகையில் கதை சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் காவ்யா கர்ப்பமாக உள்ளார். இந்த விஷயம் காவ்யாவின் கணவருக்கு முன்பே அவருடைய காதலர் ஜீவாவுக்கு தெரியவருகிறது.

அதனால் மகிழ்ச்சி அடைந்த ஜீவா, வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தகவலை அறிவிக்க முனையும் போது, அதை காவ்யா தடுத்துவிடுகிறாள். ஆனால் காவ்யாவின் மாமியாருக்கு வேறொரு ஆள் மூலம் விஷயம் தெரியவருகிறது. அந்த நபர் காவ்யா கர்ப்பமாக இருப்பது ஜீஆவுக்கு தெரியும் என்று கொளுத்தி போடுகிறார்.

இதனால் ஆத்திரமடையும் மாமியார் காவ்யாவிடம் கடும் கோபத்துடன் விஷயத்தை கேட்கிறார். என்னிடம் சொல்லாமல் எதற்கு ஜீவாவிடம் கூறினாய் என்று அதட்டுகிறார். இதில் காவ்யா அதிர்ச்சி அடைகிறாள். இத்துடன் ப்ரோமோ வீடியோ நிறைவடைகிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் பலர், ஈராமான ரோஜாவே 2 பாரதி கண்ணம்மா சீரியல் போல இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.