ஃபகத் பாசில் விஷயத்தில் நடக்கும் புது ட்விஸ்டு..!!
மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக ஃபகத் பாசில், சூப்பர் டீளக்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதை தொடர்ந்து வேலைக்காரன், விக்ரம் போன்ற படங்களில் நடித்தார். குறிப்பாக விக்ரம் படத்தில் கதாநாயகனுக்கு இணையாக, இவர் நடித்த அமர் வேடம் அமைந்திருந்தது.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் ஃபகத் பாசில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து புஷ்பா 2, தூமம் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வேறொரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் அமர் என்கிற கதாபாத்திரத்தில் ஃபகத் பாசில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் எல்.ஐ.சி யூனிவர்சல் கதைகளில் முக்கியத்துவம் பெற்றதாகும். தற்போது விஜய் நடித்து வரும் லியோ படமும் எல்.ஐ.சி-க்குள் தான் வருகிறது.
ஏற்கனவே அந்த படத்தில் நரேன் நடித்து வருகிறார். இதனால் அமர் கதாபாத்திரமும் லியோ படத்துக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதி செய்யும் விதமாக ஃபகத் பாசில் லியோ படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஃபகத் பாசில், லியோ படத்தில் தனது கதாபாத்திரம் இடம்பெற வாய்ப்புள்ளதாக சூசகத்துடன் கூறி இருந்தார். அதனால் லியோவில் அவர் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.