100 கோடி கிளப்பில் இணைந்த ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ திரைப்படம்..!

 

2024 ஆம் ஆண்டு யாருக்கு சிறப்பாக அமைந்ததோ இல்லையோ மலையாள திரையுலகிற்கு சிறப்பாக அமைந்துள்ளது.

நடப்பாண்டில் வெளியான பிரேமலு, Bramayugam, மஞ்சுமெல் பாய்ஸ் போன்ற திரைப்படங்கள் மலையாளம் மட்டுமின்றி பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படங்களாக உருவெடுத்துள்ளது .

அந்தவகையில் தற்போது பகத் பாசில் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ஆவேசம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் உருவான இப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் தற்போது ரசிகர்களின் தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது.

மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை இளம் வயதினர் அதிகம் கொண்டாடி வருவதாக தகவல் பரவிய நிலையில் தற்போது ஒரு சிறப்பான தரமான தகவல் வெளியாகி உள்ளது .

இப்படம் வெளியாகி 13 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் 100 கோடி வசூலை தற்போது கடந்துள்ள நிலையில் ஃபஹத் ஃபாசிலின் குஷியில் கொண்டாடி வருகின்றனர்.