5 தங்கப் பதக்கங்களை தட்டித் தூக்கிய பிரபல நடிகரின் மகன்..!! குவியும் பாராட்டுக்கள்..!!
சின்னத்திரை நடிகராக இந்தி சீரியல்களில் நடித்து வந்த மாதவன், 2000-ம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தை இயக்கி நடித்து தனது அபார திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.
மாதவனின் ஒரே மகன் வேதாந்துக்கு தந்தை வழியில் நடிகர் ஆகும் ஆசை இல்லை. அதற்கு மாதவனும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வேதாந்துக்கு நீச்சல் மீது தான் ஈடுபாடு. மகனின் விருப்பத்தை அறிந்து செயல்படும் தந்தையான மாதவன் விளையாட்டுத் துறையில் மகனை வெற்றியாளராக பார்க்க ரொம்பவே ஹேப்பி ஆகி உள்ளார். சர்வதேச நீச்சல் போட்டிகள், இந்தியளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து பதக்கங்களை மாதவன் மகன் வேதாந்த் குவித்து வருகிறார்.
5வது கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டிகள் மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் கலந்து கொண்டு 5 தங்கப் பதக்கங்கள் வென்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். மகாராஷ்ட்ரா மாநில அணிக்காக விளையாடிய வேதாந்த் 100, 200, 1500 மீ., பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார்.
6,000 பேருக்கு மேல் விளையாடிய இந்த நீச்சல் போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்கள் வென்றது மட்டுமின்றி 400 மீ., மற்றும் 800 மீ., பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களையும் வேதாந்த் வென்று சாதனை படைத்துள்ளார். பதக்கங்களுடன் தனது மகன் வேதாந்த் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து நடிகர் மாதவன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.