அஜித் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரபல நடிகர்கள்..!!

 

நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் கடந்த செப்டம்பர் 24-ல் வெள்ளியன்று சென்னையில் காலமானார். வயது மூப்பு மற்றும் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் வெள்ளி கிழமையன்று தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மற்றும்  கமல், விஜயகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.

விஜய், பார்த்திபன், ஏஎல் விஜய், முருகதாஸ், மகிழ்திருமேனி, சிம்பு, மிர்ச்சி சிவா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என பல பிரபலங்கள் நேரில் சென்று அஜித்திற்கு ஆறுதல் கூறினர். இந்நிலையில் நடிகர்கள் சூர்யா, கார்த்திக் அஜித்தின் வீட்டிற்கு இன்று (மார்ச் 27) நேரில் சென்று அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர். மேலும் தற்போது அஜித் வீட்டிற்கு சூர்யா, கார்த்திக் காரில் சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.