பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

 

2013-ல் வெளியான ஜீ டிவியில் ஒளிபரப்பான ‘கெல்தி ஹை ஜிந்தகி ஆன்க் மிச்சோலி’ தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிவாங்கி ஜோஷி. அதனைத் தொடர்ந்து பெயின்டேஹா, லவ் பை சான்ஸ், பெகுசராய் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.

2020-ம் ஆண்டில், கேன்ஸ் திரைப்பட விழாவில் எவர் ஓன் ஸ்கை திரைப்படத்துடன் அறிமுகமாக இருந்தார் நடிகை சிவாங்கி, ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக, படம் பின்னர் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை சிவாங்கி ஜோஷி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாலிவுட் நடிகை சிவாங்கி ஜோஷி, மருத்துவமனையில் இருந்து கொண்டே வெளியிட்டுள்ள பதிவில், ‘அனைவருக்கும் வணக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன் எனக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டது. தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த 2 நாட்களாக கடினமான சூழலில் இருந்து மீண்டு வருகிறேன்.

மருத்துவர்கள், குடும்பத்தினர் உதவியுடன் குணமடைந்து வருகிறேன். எனது நண்பர்களும், ரசிகர்களும் அவர்களது ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் தான் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.