பிரபல நடிகைக்கு விரைவில் திருமணம் ?

 

காதலில்  விழுந்தேன் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி  கொடுத்தவர் தான் சுனைனா. இவர் தெலுங்கு படங்களில் நடித்து மிகவும் ஃபேமஸாக காணப்பட்டார்.இதைத்தொடர்ந்து மாசிலாமணி, நீர்ப்பறவை, கவலை வேண்டாம், வம்சம், தொண்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

35 வயதாகும் நடிகை சுனைனாவுக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை. பட வாய்ப்புகள் இன்றியும் காணப்படுகிறார்.இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் லாக் என கேப்டன் போட்டு நபர் ஒருவரின் கையை பிடித்துக் கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் யார் அந்த நபர்? உங்களை கட்டிக்கப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி யாருன்னு முகத்தை காட்டுங்களேன் என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.