பிரபல இயக்குநர் பேச்சால் பரபரப்பு : விஜயகாந்த் கொன்றவர்களை பிடிக்காவிட்டால் முதல்வரும் கொல்லப்படுவார்!
சினிமா, அரசியல் என பல்வேறு துறைகளில் தனி முத்திரை பதித்த விஜயகாந்த் மறைவால் ரசிகர்களும், மக்களும் கண்ணீர் மல்க கதறி வருகிறார்கள். அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. விஜயகாந்த் மரணம் தமிழகத்தில் சோகம் என்றால். மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் பரபரப்பு மற்றும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கேப்டன்’ என்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தலைவர் கொல்லப்பட்டதாக சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்துள்ளார். அதில், “உதயநிதி ஸ்டாலின் அண்ணாவை குறிவைப்பார்கள். கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்து, ரெட் ஜெயன்ட் அலுவலகத்தில் அமர்ந்து, ‘நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்’ என்றேன். கலைஞரை (கருணாநிதி) கொன்றது யார், இரும்பு பெண்மணி ஜெயலலிதாவை கொன்றது யார் என்று கண்டுபிடிக்கும்படி கேட்டேன்.
இனி கேப்டன் விஜயகாந்தை கொன்றது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் பிடிக்கப்பட வேண்டும். இதை நீங்கள் தவறவிட்டால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் கமல் ஹாசன், முதல்வர் ஸ்டாலினை கொலை செய்ய முயற்சிப்பார்கள்.