பிரபல இயக்குனருக்கு கோலாகலமாக நடந்த திருமணம்..!

 

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சிவாங்கி, எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் டான். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருந்தார்.

டான் திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனாலும் அந்த வாய்ப்பு அமையாமல் போகவே மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கும் வர்ஷினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது அவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கடந்த செப்டம்பர் முதலாம் தேதி சிபி  சக்கரவர்த்தி வைத்த பேச்சுலர் பாட்டில் சிவகார்த்திகேயன், சிவாங்கி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். மேலும் இதனை கேக் வெட்டி கொண்டாடியும் உள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் தற்போது சிபிச் சக்கரவர்த்தி - வர்ஷினி திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி ஆகியவை கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. குறித்த விழாவில் சிவகார்த்திகேயன், அட்லீ, தர்ஷன், சிவாங்கி, எஸ்ஜே சூர்யா, இயக்குனர், ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார்கள்.