பிரபல மலையாள நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் மரணம்.. சோகத்தில் திரையுலகம்!!

 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த நடிகை சுபி சுரேஷ். சினிமாலா என்ற நகைச்சுவைத் தொடரின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பல நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். 

சுபி சுரேஷ் வெளி நாடுகளிலும் பல மேடை நிகழ்ச்சிகளில் நகைச்சுவை வேடங்களில் நிகழ்த்தப்பட்டுள்ளன. சூர்யா டிவியில் குழந்தைகளுக்கான குட்டிப்பட்டாளம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 2006-ம் ஆண்டு ராஜசேனனின் கனக சிம்மாசனம் படத்தின் மூலம் அறிமுகமானார். கிரகநாதன், தகசரலகலா, எலசம்மா என்ன ஆண் குட்டி, டிராமா மற்றும் காரியஸ்தன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை சுபி சுரேஷ் கடந்த ஜனவரி 28-ம் தேதி ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையான ராஜகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். 

சுபிக்கு மஞ்சள் காமாலை இருப்பது கண்டறியப்பட்டதாகவும், நுரையீரல் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை அளிப்பது கடினமாக இருந்ததாகவும் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடுமையான கல்லீரல் பாதிப்பு காரணமாக சமீபத்தில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சுபி சுரேஷ் சிகிச்சை பலனின்றி இன்று (பிப். 22) காலை காலமானார்.

பிரபல மலையாள காமெடி நடிகை சுபி சுரேஷ் வெறும் 42 வயதில் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த தகவல் ஒட்டுமொத்த மலையாள திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என பலரும் நடிகை சுபி சுரேஷின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.