தேம்பி அழுத ரசிகை.. ஆசையை நிறைவேற்றிய துல்கர் சல்மான் !

 

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’. வெங்கி அட்லுரி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தைச் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இப்படம் வரும் 31 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இப்படத்தின் புரமோஷன் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய துல்கர் சல்மான், “நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னுடைய படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்வமாக இருக்கிறேன். தீபாவளிக்கு நிறைய படங்கள் வருகிறது. அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும். ‘லக்கி பாஸ்கர்’ படத்துக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது மேடையில் பேசிக் கொண்டிருந்த துல்கர் சல்மானை பார்த்துப் பெண் ரசிகை ஒருவர் தேம்பி அழுதார். அந்தப் பெண் ரசிகரைத் துல்கர் சல்மான் மேடைக்கு அழைத்தார். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் அழுதுள்ளார். அந்த ரசிகையுடன் புகைப்படம் எடுத்து அவரது ஆசையை நிறைவேற்றினார் துல்கர் சல்மான். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

<a href=https://youtube.com/embed/qkRdL4lr3IA?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/qkRdL4lr3IA/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">