குமுறும் ரசிகர்கள்..! சலிப்பை ஏற்படுத்திய ப்ரோமோ..!
டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலை வகித்து வந்த சீரியல் சிறகடிக்க ஆசை.தற்போது இந்த சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதன்படி எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது முத்து தான் அந்த லெட்டர் கொடுத்த நபரை கண்டுபிடித்து விட்டதாக சொல்லுகின்றார். இதைக்கேட்டு ரோகினி அதிர்ச்சி அடைகின்றார்.
மேலும் அது யார் என்று மீனா கேட்க, முதன்முதலாக அவரை மனோஜின் கல்யாணத்தில் வைத்து பார்த்தேன். அதற்குப் பிறகு எனது காரில் வந்து பொண்ணுங்களை பற்றி தப்பாக பேசிக்கொண்டு இருந்தார். இதனால் அவனை அடித்து அனுப்பினேன். அதன் பின்பு இன்னொரு நாள் ரோட்டில் வயது போன பாட்டியை இடித்து தள்ளி விட்டு சென்றான். இதனால் பொலிஸில் பிடித்துக் கொடுத்தேன்.
ஆனால் அவனுக்கு என்னுடன் பிரச்சினை என்றால் அவன் என்னுடன் தான் மோதி இருக்க வேண்டும். ஏன் சம்பந்தம் இல்லாமல் இந்த ஓடுகாலி மனோஜ் பையனுடன் மோதுகிறார் என்று தான் தெரியவில்லை.
எப்படியும் ஒரு நாள் சிக்குவான். அப்போது நான்கு அடி போட்டால் உம்மை எல்லாம் கொட்டி விடுவான் என்று முத்து சொல்ல, இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரோகினி என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டுள்ளார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
எனினும் தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பில்லாமல் செல்வதாகவும், இது எல்லாம் ஒரு ப்ரோமோவா? ரோகிணி கடைசி மட்டும் சிக்க மாட்டார் என்று ரசிகர்கள் தமது வெறுப்பை கொட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.