ரசிகர்கள் அதிர்ச்சி..! சினிமாவை விட்டு விலகும் பிரபல நடிகர்..!

 

கடந்த ஆண்டு வெளியான ’12வது ஃபெயில் (12th Fail) படம் பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்தது. இப்படத்தில் நடித்த விக்ராந்த் மாஸ்ஸி-க்கு இந்தப் படம் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

பல தடைகளைக் கடந்து தனது திறமையின் மூலம் பலரது மனதில் இடம் பிடித்துள்ள விக்ராந்த், சினிமாவை விட்டு விலகுவது குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வணக்கம், கடந்த சில வருடங்களும் அதற்குப் பின்னரும் தனித்தன்மை வாய்ந்தவை. உங்களது அழியாத ஆதரவுக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள்.

ஆனால் நான் முன்னோக்கிச் செல்லும்போது, மறுபரிசீலனை செய்து வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரத்தை நான் உணர்கிறேன். கணவன், தந்தை மற்றும் மகனாக. மேலும் ஒரு நடிகராகவும். எனவே வரும் 2025ல், கடைசியாக ஒருமுறை மீண்டும் சந்திப்போம். காலம் சரியாக இருக்கும் வரை. கடந்த 2 படங்கள் எனக்குப் பல வருட நினைவுகளைக் கொடுத்துள்ளது. மீண்டும் நன்றி. என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.