ரசிகர்கள் ஷாக்..! கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தகவல்..!

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் கோட். இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜா இசையிலும் இந்த படம் உருவாகி உள்ளது.

இந்தப் படத்தில் பிரஷாந்த், சினேகா ,மீனாட்சி சவுத்ரி,போன்ற பல பிரபலங்களிலிருந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூன்றாவது பாடல் சமீபத்தில் வெளியாகி மக்கள் மனதில் இடம் பெற்றது.

செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முன் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து பட குழு எடுத்த முடிவு என்ன என்று பார்க்கலாம்.

விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விரைவில் நடக்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக எந்த நிகழ்ச்சிகளும் பேசுவதை தவிர்க்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஒரேடியாக கோட் படத்தின் வெற்றி விழாவாக கொண்டாடபோவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழாவை எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இது ஒரு பெரும் அப்செட்டாக மாறி உள்ளது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று பொறுத்திருந்து பார்க்கலாம்