கொண்டாடும் ரசிகர்கள்..! தேசிய விருது பெற்ற இசைப்புயல்..!

 

தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் திரைப்படத்திற்கும் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இதன் பின்னணி இசையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் ஏ.ஆர் ரகுமான்.

அதேபோல மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் இசை அமைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் 70 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டிற்கான விருதுகளில் ஏ.ஆர் ரகுமான் சிறந்த இசை அமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தனது முப்பது ஆண்டுகள் திரை உலக பயணத்தில் அவர் ஏராளமான வெற்றிப் பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். தற்போது ஏழாவது முறையாக தேசிய விருதைப் பெற்ற ஏ.ஆர் ரகுமானை பலரும் பாராட்டி வருகின்றார்கள்.