ரிலீஸ் தேதியுடன் வெளியான வலிமை பட போஸ்டர்- ரசிகர்கள் கொண்டாட்டம்..!

 

நடிகர் அஜித் நடிப்பில் தயாராகி வரும் ‘வலிமை’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் அப்டேட்டுடன் வெளியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் இரண்டாவதாக தயாரித்து வரும் வலிமை. அவருடைய முதல் தமிழ் படத்தை இயக்கிய ஹெச். வினோத் தான் இந்த படத்தையும் இயக்கி வருகிறார். அஜித் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சுமார் இரண்டாண்டு காலமாக இந்த படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பிரச்னையால் படத்திற்கான தயாரிப்பு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. அதன்படி சென்னையில் வலிமை படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித் பங்கேற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதற்கிடையில் பல மாதங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த வலிமை பட அப்டேட் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி படத்தின் முதல் பார்வை மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் படத்தின் ரிலீஸ் தொடர்பான விபரங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் மிகுந்த படமாக தயாராகியுள்ள ‘வலிமை’ இந்தாண்டுக்குள் வெளிவரவுள்ளது. ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட் படங்களுக்கு முன்னதாகவே வலிமை படம் வெளியாகி விடும் சொல்லப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.