அதிர்ச்சியில் ரசிகர்கள்! பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் திடீர் மரணம்..! 

 

சன் டிவியில் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ தொடர் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. இந்த தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா சீரியல்களில் நடித்தார்.

இவருக்கும் தனது காதலர் அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு இரு வீட்டார் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது. அரவிந்த் சேகர்- ஸ்ருதி தம்பதியினர் தங்களது திருமண வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், இன்று திடீரென மாரடைப்பால் அரவிந்த் சேகர் மரணமடைந்துள்ளார்.

ஜிம், உணவு என ஃபிட்னஸில் ஆர்வம் கொண்ட அரவிந்த் சேகர் ’மிஸ்டர் தமிழ்நாடு 2022’ பட்டம் வென்றிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது உடல் நலத்தில் எப்போதும் அக்கறையுடன் இருக்கும் அரவிந்த் சேகர், மாரடைப்பால் மரணமடைந்தது நடிகர், நடிகைகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்துக்குப் பின் சீரியலை விட்டு விலகி பிசினஸில் கவனம் செலுத்தி வந்த ஸ்ருதி விரைவில் இந்த சோகத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.