ஜோவிகாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
ஜோவிகாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..! ஏன் தெரியுமா ?
பிக்பாஸ் நிகழ்ச்சியில்…இந்த முறை கலந்து கொண்டுள்ள சில போட்டியாளர்கள் தங்களுடைய பள்ளி கல்வியை கூட இன்னும் சரியாக முடிக்காதவர்கள் என்று தான் சொல்லவேண்டும்…ஜோவிகா தற்போது தான் 18 வயதை எட்டியுள்ளார் மீண்டும் படிக்க வேண்டும் என நினைத்தால் இதுவே அவரின் சரியான வயதும் கூட, எனவே விசித்ரா அவரிடம் 12-ஆவது வரையிலாவது படிக்க வேண்டும் என, கூறியதற்கு ஜோவிகா சண்டையெல்லாம் போட்டு பரபரப்பாக பேசினார்…
இதை தொடர்ந்து படிப்பு குறித்து மிகப்பெரிய விவாதமே பிக்பாஸ் வீட்டில் நடந்தது…குறிப்பாக கமல்ஹாசன் படிக்க வேண்டும் என்கிற விதி இருக்கலாம் ஆனால் கல்வி வதை இருக்க கூடாது என கூறினார்.
அதே சமையம் படிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று என்பதையும் ஆணி தனமாக தெரிவித்தார் கமல்.மக்கள் பலரும் விசித்ராவுக்கு ஆதரவாகவே தங்களின் கருத்தை தெரிவித்து வந்தனர் அவரின் பேச்சுக்கு எதுவும் தவறில்லை என பலரும் பேசி இருந்தனர்.
இப்படி படிப்பு பற்றி வாய் கிழிய பேசிய ஜோவிகா கணக்கு போட்ட லட்சணத்தின் வீடியோ ஒன்றை தான் பிக்பாஸ் ரசிகர்கள் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்…அது இப்போது ட்ரெண்டில் இருக்கின்றது…அதாவது ஜோவிகா ஷாப்பிங் செய்யும் போது 400*4 எவ்வளவு என யோசிக்க அங்கு வரும் விஜய் 800 என்று கூறுகிறார்.
இதற்கு ஜோவிகாவுக்கு கணக்கு தெரியாததால் அவர் ஆமாம் என்பது போல் சொல்லி இருந்தார்…இந்த வீடியோவை வெளியிட்ட ரசிகர்கள்….நல்ல வேலை இதை விசித்ரா பார்க்க வில்லை என கூறி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.