தீயாய் பரவும் தகவல்..! மீசை ராஜேந்திரன் சொன்ன சீக்ரெட் என்ன தெரியுமா ?
கோட் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக் குழுவினர் வெளியிட்டு வருகின்றார்கள்.
வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.
அத்துடன் அண்மையில் மறைந்த விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள். அதேபோல புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பவதாரணியின் குரலும் கோட் படத்தில் பாட வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோட் படத்தில் சிவகார்த்திகேயன், த்ரிஷா மற்றும் அஜித் ஆகியோர் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளதாக மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தகவல் தற்போது வைரலாகி வரும் நிலையில் தளபதி படத்தில் தலயா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். இந்த படத்தில் திரிஷா நடிப்பது உறுதியான நிலையில், சிவகார்த்திகேயன், தோனி மற்றும் அஜித் ஆகியோர் நடித்துள்ளதாக கூறிய விஷயம் பெரும் வைரலாக உள்ளது.
எனினும் வெங்கட் பிரபு கோட் திரைப்படத்தில் என்ன சீக்ரெட் வைத்திருக்கிறார் என்பதை படம் வெளியான பிறகு தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.