‘3BHK’ படத்தின் முதல் விமர்சனம்... படம் எப்படியிருக்கு?
‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஸ்ரீகணேஷ். அடுத்து வெளியான ‘குருதி ஆட்டம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அப்போது இயக்குநர் ஸ்ரீகணேஷ் அடுத்த படம் மக்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்று உறுதியளித்திருந்தார்.
அதன்படி அவர் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் '3BHK'. இந்தப் படம் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். சாந்தி டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரித்துள்ளார்.
சென்னை போன்றதொரு பெரு நகரில் சொந்த வீடு வாங்கப் போராடும் நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கைக் கதைதான் இந்தத் திரைப்படம். அம்ரித் ராம்நாத் இசையமைத்திருக்கிறார். இப்படம் இன்று ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் விமர்சனத்தை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சிம்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “3BHK படத்தை பார்த்தேன். உணர்வுப்பூர்வமான நெகிழ்ச்சியான இந்த திரைப்படம் உங்களை எமோஷனலான பயணத்துக்கு அழைத்துச் செல்லும். சித்தார்த், சரத்குமார் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். படக்குழுவினர் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.