கங்குவா படத்துக்கு பிரபலம் கொடுத்த ரிவ்யூ..!

 

பத்திரிக்கையாளரும் பிரபல சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கங்குவா படத்திற்கு தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், அந்த கால கலி யுகத்தில் இருந்து இந்த காலம் வரையில் சூர்யாவும் பாபி தியோலும் சண்டை போட்டுக் கொண்டுள்ளார்கள். இந்த படத்தில் கார்த்தி கேமியோவாக நடித்து கலக்கியுள்ளார்.

இந்த படத்தில் சூர்யாவின் உழைப்பும் சிறுத்தை சிவாவின் மெனக்கடலும் நன்றாகவே தெரிகின்றது. இப்படியான பிரமாண்ட படத்தில் நாமும் நடித்து விடலாம் என்ற ஆசை சூர்யாவுக்கு வந்துள்ளது.

தீவு ஒன்றில் வசித்து வரும் சூர்யாவின் மக்களுக்கும் பாபி தியோலின் மக்களுக்கும் இடையே மாவீரன் யார் என்பதில் தான் போட்டி காணப்படுகின்றது. அதற்காக அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை சண்டை போட்டு வருகின்றார்கள். இறுதியில் சிக்ஸ் பேக் காட்டி பாபி தியோலை சூர்யா அடித்து வீழ்த்தினாரா? இல்லையா? என்பதை தான் படத்தின் மீதிக் கதை என பயில்வான் கூறியுள்ளார்.

மேலும் இது ரஜினிகாந்துக்காக உருவாக்கப்பட்ட கதை. அதை சூர்யாவுக்கு ஏற்றது போல மாற்றி உள்ளார் சிறுத்தை சிவா. இந்த படத்தில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது திஷா பதானியின் கவர்ச்சி தான். குறைந்த நேரத்தில் அவர் வந்தாலும் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். யோகி பாபு, ரெடின் கின்ஸிலி ஆகியோரின் காமெடியும் பக்காவாக உள்ளது.

ஆனாலும் அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட கங்குவா  படம் போட்ட காசை மீண்டும் எடுக்குமா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார் பயில்வான்.

<a href=https://youtube.com/embed/ZZb7tK8gJhU?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/ZZb7tK8gJhU/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">