இன்று மாலை 5 மணிக்கு ரெடியா இருங்க..! வெளியாகிறது கார்த்தியின் ஜப்பான் டீஸர்..!
‘ஜப்பான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் அது குறித்த போஸ்டர் வைரலானது என்பதும் தெரிந்ததே…இன்று இந்த படத்தின் டீசர் வரவுள்ளதாம்..
கார்த்தி, அனு இமானுவேல், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நடிகர் கார்த்தியின் 25-ஆவது திரைப்படம், ‘ஜப்பான்’. ராஜுமுருகன் இயக்கும் இந்தப் படத்தை ட்ரிம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இது ஒரு தனி ரகமான ஜாலி படம் என சொல்லப்படுகிறது…
இந்நிலையில் இன்று இப்படத்தின் ஸ்பெஷல் வீடியோ அதாவது படத்தின் டீஸர் வீடியோ வருகிறது என அதிகாரபூர்வமாக சொல்லியுள்ளனர் படக்குழு..அதனால் ரசிகர்கள் மிகிந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்..எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.