ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாளுக்காக ஆர்.ஆர்.ஆர் படக்குழு வெளியிட்ட பரிசு..!

 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாகுபலி படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜமவுலி இயக்கி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ரணம், ரவுத்திரம், ரத்தம் ஆகியவற்றை மையமாக வைத்து வரலாற்றுப் பின்னணியில் இந்த படம் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். கதாநாயகியாக ஆலியா பட் நடிக்கிறார். தெலுங்கு, இந்தியில் நேரடியாகவும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளிவரவுள்ளது.

இந்த படத்திற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அதனால் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் படத்தின் வெளியீடு அடுத்தாண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான இன்று, ஆர்.ஆர்.ஆர் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. கையில் ஈட்டியுடன் மாஸான கெட்டப்பில் இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.