தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்த நற்செய்தி..! 

 
கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள் தனுஷும், ஐஸ்வர்யா.அன்றைய தினம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதையடுத்து விசாரணையை அக்டோபர் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி. அன்றும் தனுஷும், ஐஸ்வர்யாவும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 

இதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 2ம் தேதி நடக்கும் என தெரிவித்தார் நீதிபதி. தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து வாழ வேண்டும் என ரஜினிகாந்த் விரும்புகிறாராம். விவாகரத்திற்கு விண்ணப்பித்த பிறகு கூட தனுஷை வீட்டிற்கு வரவழைத்து பேசினார் ரஜினி. ஆனால் எனக்கு விவாகரத்து தான் வேண்டும் என ஐஸ்வர்யா அப்பொழுது பிடிவாதமாக இருந்ததாக கூறப்பட்டது. 

இந்நிலையில் ரஜினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார். அவரின் நிலையை பார்த்த லதாவோ, உனக்கு உங்கப்பாவை விட உன் பிடிவாதம் தான் முக்கியமா என ஐஸ்வர்யாவிடம் கேட்டாராம். இதையடுத்து தன் அப்பாவின் விருப்பப்படி தனுஷுடன் சேர்ந்து வாழ்வது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.  

நவம்பர் 2ம் தேதியும் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார்கள் என கூறப்படுகிறது. இந்த தகவல் தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஐஸ்வர்யா, மகன்கள் யாத்ரா, லிங்காவை விரைவில் தன் போயஸ் கார்டன் பங்களாவுக்கு அழைத்து வருவார் தனுஷ் என எதிர்பார்க்கப்படுகிறது.