வைரலாகும் குட் நைட் பட நடிகையின் திருமணம் போட்டோஸ்..!

 

தர்புகா சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு நேரடியாகவே ஓடிடியில் ரிலீஸ் ஆன திரைப்படம் தான் முதல் நீ முடிவும் நீ. பள்ளி பருவ வாழ்க்கை மையமாக எடுக்கப்பட்ட இந்த படம், பலரது பள்ளிப் பருவ நினைவுகளையும் உணர்வுபூர்வமாக வெளிக்காட்டி இருந்தது.

இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் மீதா ரகுநாத். இதில் அவருக்குஹீரோவுக்கும் இடையே உள்ள  கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

முதல் நீ முடிவு நீ படத்தின் வெற்றிக்கு இவர்களின் கெமிஸ்ட்ரி ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இப்படத்தில் ஸ்கூல் பெண், குடும்ப பெண் என இரண்டு பரிணாமங்களில் நடித்திருந்தார் மீதா. முதல் படத்திலேயே தன் நடிப்பால் பலரையும் வியக்க வைத்து பாராட்டுகளையும் பெற்றார். 

இதை தொடர்ந்து குட் நைட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இதில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்திருந்த மீதா, தன் கணவனுக்காக எதையும் சகித்துக் கொள்ளும் ஒரு அப்பாவி பெண்ணாக வேற லெவலில் நடித்திருந்தார். இதுவும் வேறு லெவலில் ஹிட் ஆனது.

தமிழில் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு திடீரென திருமண நிச்சயதார்த்தம்  இடம் பெற்றது. இவரது திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது, மீதா ரகுநாத்தின் திருமணம் இன்று இரு வீட்டார, உறவினர்கள், நண்பர்கள் சூழ கோலாகமாக நடைபெற்று முடிந்துள்ளது. மீதா ரகுநாத் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படங்கள்.

மேலும் சினிமா செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்