நடிகர் திலகத்தின் பிறந்தநாளில் டூடுல் போட்டு சிறப்பு செய்த கூகுள்..!

 

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்டு மரியாதை செய்துள்ளது கூகுள்.

1952-ம் ஆண்டு வெளியான பாரசக்தி படம் மூலம் சினிமாவில் கால்பதித்தவர் சிவாஜி கணேசன். அவருடைய நடிப்பாற்றால் உலகளவிலான ரசிகர்களை கவர்ந்தது. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகள் என மொத்தம் 300-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

தற்போது வரை திரையுலகில் அவருடைய நடிப்புக்கு இணையான நடிகர் எவருமில்லை என்று சொல்லும் அளவுக்கு நடிப்புச் சக்கரவர்த்தியாக திகழ்கிறார் சிவாஜி கணேசன். கடந்த 2001-ம் ஆண்டு மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருடைய கலைச்சேவையை போற்றும் வகையில் தமிழக அரசு மெரினாவில் அவருக்கு சிலை வைத்தது.

ஃபிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதை பெற்ற முதல் இந்திய நடிகரான சிவாஜி, கலைமாமணி விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருது, தாதா சாகேப் பால்கே விருது பல விருதுகளை அளித்து மத்தியம் அரசு கவுரவப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவருடைய 93-வது பிறந்தநாளை முன்னிட்டு சிவாஜி உருவத்தை போன்ற  டூடுல் போட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு செய்துள்ளது.

முன்னதாக  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை திரையுலகமே கொண்டாடும் தினமான இன்றைய தினத்தை அரசு விழாவாக கொண்டாடுவதற்கும் தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.