நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்த கோபி.. காப்பாற்ற போவது பாக்கியாவா? ராதிகாவா ?

 
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில் ஏற்கனவே இனியா, அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க. ஏன் அம்மாவுக்கு இப்படி பண்ணுனீங்க? எல்லாரோட  சந்தோஷத்தையும் கெடுத்தது நீங்கதான்... நீங்க வீட்டை விட்டு போன பிறகு எங்கட வீடு சந்தோஷமாகவே இல்லை... அம்மா அவங்க வழியில் போறாங்க.. ஆனா நீங்க ஏன் ரெஸ்டாரண்டில் பழைய கறியை கலந்தீங்க? எழில் அண்ணாட பட பூஜைக்கு அம்மாவை வர விடாமல் பண்ணீங்க என்று கேள்வி கேட்கின்றார்.

இதை தொடர்ந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த கோபி இனியா பேசியவற்றை நினைத்து கவலைப்படுகின்றார். அந்த நேரத்தில் அவருக்கு ஹார்ட் அட்டாக் வர நெஞ்சை பிடித்துக் கொண்டு ராதிகாவுக்கு கால் பண்ணுகின்றார். ஆனால் ராதிகா போனை பார்த்துவிட்டு எடுக்கவில்லை.

அதன் பின்பு பாக்யாவுக்கு கால் பண்ணுகின்றார் கோபி.  கோபியின் போனை பார்த்த பாக்யா இவர் எதற்கு எனக்கு போன் பண்ணுகின்றார் என்று யோசிக்கின்றார். 

இவ்வாறு தற்போது கோபிக்கு ஹார்ட் அட்டாக் வந்த நிலையில் இரண்டு பொண்டாட்டிக்கும் கால் பண்ணுகின்றார். ஆனால் இதில் யார் போனை எடுத்து அவரை யார் ஹாஸ்பிடலில் சேர்க்கப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.