கோபிக்கு வந்த ஹார்ட் அட்டாக்..! இனியாவுக்கு பளாரென அறைந்த பாக்கியா.?

 

இன்று வெளியான பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோவில் ராதிகா வீட்டை காலி பண்ணிவிட்டு போவதாக சொல்ல, கோபி அவரை பாக்யா வீட்டிற்கு வரவைத்து பேசுகின்றார். இதன் போது இப்ப எதற்காக வீட்டை காலி பண்ணுகின்றாய் என்று கேட்க, எனக்கு இப்போ நீங்களும் இல்ல என்று ஆகிவிட்டது இதனால் நான் எதற்காக இங்கே இருக்க வேண்டும் என்று ராதிகா சொல்லுகின்றார்.

எதற்காக இப்படி அவசரப்படுகின்றாய்? என்னை நிம்மதியாக இருக்கவே விட மாட்டியா? என்று ராதிகாவை திட்டுகின்றார் கோபி. மேலும் கொஞ்ச நாள் என் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கக் கூடாதா என கேட்க, நீங்க என்னையையும் மயூவையும் பத்தி யோசிச்சிங்களா என்று ராதிகா பதிலடி கொடுக்கின்றார்.

இதன் போது கோபி மீண்டும் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்து விழுகின்றார்.. இதனால் அங்கிருந்த இனியா இந்த வீட்டில் நடக்கின்ற எல்லா பிரச்சனைக்கும் நீங்கதான் காரணம் என்று ராதிகாவை சுட்டிக்காட்டி பேசுகின்றார்.

இதை பார்த்த பாக்கியா அமைதியாக இருக்குமாறு இனியாவிடம் சொல்லவும், முடியாது என்று சொல்லி இனிமேல் இந்த வீட்டுக்கு வராதீங்க.. எங்க டாடிய கொன்னுடாதீங்க என்று சொல்லுகிறார்.

இதைக் கேட்ட பாக்கியா இனியாவுக்கு பளார் என்று அறைகிறார். இதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ..

<a href=https://youtube.com/embed/4rU5JuejykY?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/4rU5JuejykY/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">