கோபிநாத்தின் முகத்திரை கிழிந்தது..?? நேருக்கு நேர் மோதிய பாக்கியா..!

 

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று விரிவாக பார்ப்போம்.

அதில் பாக்கியா எடுத்த லட்டு ஆர்டர்களை ரெஸ்டாரண்டில் வைத்து செய்து முடிக்கின்றார்கள். அதன் பின்பு அதை வண்டியில் ஏற்றி அனுப்பி விட்டு பாக்கியா பெருமூச்சு விடுகின்றார்.

அந்த நேரத்தில் ரெஸ்டாரண்டில் இருந்த செஃப்-க்கு கோபி கால் பண்ணுகின்றார். இதனை பாக்யா பார்த்து விடுகின்றார். உடனே கால் ஐ ஸ்பீக்கரில் போட, அவர் எல்லாவற்றையும் உளறி விடுகிறார்

அதாவது ஏற்கனவே பிரியாணியில் கெட்டுப்போன கறியை கலந்தது போல லட்டிலும் ஏதாவது கலந்து பாக்யாவின் ரெஸ்டாரண்டை ஒரேடியா பூட்டுமாறு ஏதாவது செய்யுங்கள் என்று சொல்லுகின்றார். இதனை ஈஸ்வரி, பாக்கியா ரெஸ்டாரண்டில் வேலை செய்பவர்கள் என எல்லோரும் கேட்டு அதிர்ச்சி அடைகின்றார்கள்.

இதை தொடர்ந்து கோபியின் வீட்டுக்கு பாக்கியா செல்கிறார்.. அங்கு ஆவேசத்தில் வந்த பாக்யாவிடம் என்ன பிரச்சனை என்று ராதிகா கேட்க, என்ன பழிவாங்கிறதா நினைச்சு பிரியாணியில் கெட்டுப்போன கரியை கலந்துட்டார்.. கோபிநாத் உங்கள சும்மா விட மாட்டேன் என்று நேருக்கு நேராக சவால் விட்டு வருகின்றார் பாக்யா.

<a href=https://youtube.com/embed/UR8cgV0f0yk?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/UR8cgV0f0yk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">