சாய் பல்லவி மீதான காதலை கூறிய 45 வயது சிங்கிள் நடிகர்..!!

இந்தி சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான குல்ஷன் தேவய்யா, நடிகை சாய் பல்லவி மீது கிரெஷ் இருப்பதாக கூறியுள்ளது சமூகவலைதளங்களில் கவனமீர்த்து வருகிறது.
 

கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் குல்ஷன் தேவய்யா. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘தி கேர்ள் இன் எல்லோ பூட்ஸ்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சைத்தான், ராம் லீலா, பதாய் தோ, ஹண்டர் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

பாலிவுட் படங்களில் கவனிக்கத்தக்க குணச்சித்திர நடிகராக வலம் அரும் குல்ஷன், தென்னிந்தியப் படங்களை அதிகளவில் விரும்பிப் பார்க்கக்கூடியவர். தமிழ் மொழியை சரளமாகவும் பேசக் கூடியவர். சமீபத்திய நேர்காணலில் பேசியபோது, தனக்கு சாய் பல்லவி மீது கிரெஷ் உள்ளது. அவருடைய நம்பர் என்னிடம் இருந்தும் அவரிடம் பேசுவதற்கு தைரியம் இல்லை என்று குல்ஷன் கூறியுள்ளார்.

அவருடைய இந்த பேட்டி சமூகவலைதளங்களில் கவனமீர்த்துள்ளது. மேலும் சாய் பல்லவி ரசிகர்கள் அவருடைய பேச்சை வைரல் செய்து வருகின்றனர். தனது நீண்ட நாள் காதலியான கல்லீர்ரோய் திஸியாஃப்தே என்பவரை 2012-ம் . கடந்த 2020-ம் ஆண்டு அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றுவிட்டு குல்ஷன் தேவய்யா தற்போது சிங்கிளாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.