‘குணா’ படமே அப்பட்டமான காப்பி.. அதிர்ச்சி தகவல் கூறும் பத்திரிகையாளர்..!

 

‘குணா’ திரைப்படம் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் அப்போது பெரிய வரவேற்பு பெறவில்லை. ஆனால் தற்போது ’மஞ்சம்மாள் பாய்ஸ்’ என்ற மலையாள படம் ‘குணா’ படத்தின் சில காட்சிகளை வைத்து எடுக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த படம் வெளியான ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘குணா’ படமே காப்பி படம் என்றும் இந்த படம் ’டைம் மி அப் டைம் மி டவுன்’ என்ற ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பி என்றும் கூறியுள்ளார்.

‘குணா’ படத்தின் ஆரம்ப காட்சியில் கமல் சுற்றி சுற்றி பேசும் காட்சி உள்பட பல காட்சிகள் ஹாலிவுட் படத்தில் இருப்பதாகவும் இந்த படத்தின் கதையே அந்த  ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பிதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஆனால் தமிழுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்களை கமல்ஹாசன் செய்துள்ளார் என்றும் இந்த படத்தினால் ஏற்பட்ட ஒரே நன்மை குணா குகை கண்டுபிடிக்கப்பட்டது தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் சந்தான பாரதி என்று சொல்வது முழுக்க முழுக்க பொய் என்றும் இந்த படத்தை கமல்ஹாசன் தான் இயக்கினார் என்றும் ஆனால் டைட்டிலில் மட்டும் சந்தான பாரதி பெயரை கமல்  பயன்படுத்தி கொண்டார் என்றும் கூறப்படுகிறது.