சைந்தவி பற்றி ஜிவி. பிரகாஷ் சொன்ன அந்த விஷயம்..!

 
 சமீபத்தில் ஜிவி. பிரகாஷ் அளித்த பேட்டியில் விவாகரத்தான தனது மனைவி சைந்தவி குறித்து பேசியுள்ளார். 

ஜிவி பிரகாஷ் சமீபகாலமாக அமரன், லக்கி பாஸ்கர்,  கேப்டன் மில்லர், தங்கலான் ஆகியவைக்கு  இசையமைத்த இவர் அமைத்த இசை, பாடல்கள் என எல்லாமே ரசிகர்களின் மனதினை கவர்ந்தது படங்களும் வெற்றி பெற்றது.

அது ஒரு பக்கம் இருக்க தற்போது ஒரு சில படங்களில் நடத்தும் வருகிறார். சினிமாவில் உச்சம் தொட்டுவரும் இவர் அவ்வப்போது மாபெரும் இசை நிகழ்ச்சிகளும் நடாத்தி வருகிறார்.  சமீபத்தில் இவர் நடத்திய இசைநிகழ்ச்சியில் பாடகி சைந்தவி கலந்து கொண்டு இருவரும் சேர்ந்து பாடியது வைரலானது.

இதனை குறிப்பிட்டு எழுந்த கேள்விக்கு இவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில் முதலில் நாங்கள் ஒரே துறையில் வேலை செய்பவர்கள். எல்லாருக்குமே மரியாதை கொடுக்கணும் அது படி நாங்க ஒண்ணா வேலை செய்கிறோம் அவ்வளோதான் என்று கூறியுள்ளார்.