வெளியான விமர்சனம்  - கங்குவா பாத்து பாதிபேர் தூங்கிட்டாங்க..!

 

கங்குவா திரைப்படம் இந்தியா அளவில் பெரும்பான்மையான தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. மேலும் வெளிநாடுகளிலும் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் பிற மாநிலங்களில் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட கங்குவா படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, நட்டி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் கங்குவா படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டி விமர்சனங்களை அளித்து வரும் நிலையில், ஒரு சிலர் நெகட்டிவ் விமர்சனங்களையும் அளித்துள்ளார். தற்போது அவர்களுடைய விமர்சனமும் படு வைரலாகி வருகின்றது.

அதாவது வரலாற்று கதை அம்சம் கொண்ட கங்குவா  திரைப்படம் மூன்று பாகுபலி படத்தை பார்த்தது போலவும், அவதார் படத்தை பார்த்தது போலவும் இருப்பதாக ஒரு சாரார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த படத்தில் சூர்யாவின் நடிப்புதான் ஹைலைட்டாக உள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.

அதே சமயம் இந்த படத்தின் மேக்கிங் சரியில்லை. சவுண்ட் சிஸ்டமும் வாய்க்கவில்லை.பாதிப்பேர் தூங்கிவிட்டார்கள் என ஒரு சிலர் பேட்டி கொடுத்துள்ளார்கள். மேலும் பில்டப் கொடுத்த அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை. சூர்யாவின் அடுத்த படத்தில் சரி பார்ப்போம் என தற்போது அவர்கள் சொல்லிய விமர்சனம் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.