கியூட்டாக பர்த்டே வாழ்த்து சொன்ன அருண்...!

 
 பிக் பாஸ் சீசன் 8ல் 4 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது 6 வையில் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர். இந்த சீசன் போட்டியாளராக பங்குபற்றி இருப்பவர் நடிகர் அருண்  இவர் தற்போது பிக் பாஸ் வீட்டில் விளையாடி வரும் நிலையில் இந்த வாரம் கேப்டனாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் 7ல் பங்குபற்றி டைட்டில் வின்னரான நடிகை அர்ச்சனாவுக்கு சின்ன செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதாவது அர்ச்சனாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த வாழ்த்தை கூறியுள்ளார் அருண்.  "ஹாய் ஹார்லி நீங்க நல்லா இருப்பிங்கனு நினைக்கிறேன். நானும் இங்க நல்லா இருக்கேன் இந்த வாரம் கேப்டனாக இருக்கேன்.

இன்னைக்கு உன்னோட பர்த்டே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னுடைய முயற்ச்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் உன்ன வெளிய சீக்கிரமே வந்து பாக்குறேன். என்று அருண் அர்ச்சனாவுக்கு பிக் பாஸ் கேமரா மூலம் கியூட் ஆனா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.