ஹேப்பி பர்த்டே ஜெனிலியா..! 

 

 'துஜே மேரி கசம்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைதுறையில் அறிமுகமானார் நடிகை ஜெனிலியா.

நடிகை ஜெனிலியா முதல் முதலில் நடிகர் அமிதாப் பச்சனுடன் பார்க்கர் விளம்பர படத்தில் நடித்திருந்தார். அதை பார்த்து தான் இயக்குநர் ஷங்கர் இவரை 'பாய்ஸ்' படத்திற்காக தேர்வு செய்துள்ளார்.தனது 15 வயதிலேயே மாடலிங் துறையில் சேர்ந்துள்ளார். சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் தேசிய அளவிலான கால்பந்து வீராங்கனையாக இருந்துள்ளார் ஜெனிலியா.

2008ம் ஆண்டு தமிழில் வெளியான சூப்பர் ஹிட் படம் 'சந்தோஷ் சுப்ரமணியம்'. அந்த படம் வெளியானது முதல் இளைஞர்கள் அனைவரும் ஜெனிலியா மாதிரி பொண்ணு தான் எனக்கு வேணும் என அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த அளவுக்கு அனைவரின் கியூட் கனவு கன்னியானார் ஜெனிலியா. மிகவும் சக்சஸ்ஃபுல் நடிகையாக இருந்த ஜெனிலியா திடீரென தனது காதலர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு நடிப்பதற்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டார். பின்னர் இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு ரியான் என்ற மகனும், 2016 ஆம் ஆண்டு ராய்ல் என்று மகனும் பிறந்தார்கள்.இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ, வீடியோக்கள் என அனைத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார். இவர் தன் கணவருடன் சேர்ந்து செய்யும் ரீல்ஸ் வீடியோ கணவருடன் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.