விஜய் சேதுபதியின் 'மகாராஜா’ ஹிந்தி ரீமேககில் ஹீரோ இவராம்... 1 நிமிடம் கூட யோசிக்காமல் முடிவு செய்த இயக்குனர்?

 
விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படம் 'மகாராஜா’. முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது மட்டுமின்றி இந்த படம் அவரது ஐம்பதாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'மகாராஜா’ திரைப்படத்தின் வெற்றி விஜய் சேதுபதிக்கு மட்டுமின்றி இயக்குனர் நிதிலன் சுவாமிநாதனுக்கும் ஒரு திருப்புமுனையை கொடுத்துள்ளது என்பதும் அவரை தங்கள் நிறுவனத்திற்கு படம் இயக்கி கொடுங்கள் என்று முன்னணி நிறுவனங்கள் தேடி வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நிறுவனம் ஒன்று 'மகாராஜா’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து கொடுங்கள் என்று நிதிலன் சுவாமிநாதனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து அந்த பாலிவுட் நிறுவனம் ஹிந்தியில் யாரை வைத்த இந்த படத்தை தொடங்கலாம் என்று ஆலோசனை கேட்டபோது இதில் சுவாமிநாதன் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் விஜய் சேதுபதியே நடிக்கட்டும் என்று கூறியதாகவும் இதனை அடுத்த விஜய் சேதுபதி நடிப்பில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் 'மகாராஜா’ திரைப்படம் ஹிந்தியில் அதே பெயரில் விரைவில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி தவிர மற்ற அனைத்து கேரக்டர்களும் ஹிந்தியில் உள்ள பிரபல நட்சத்திரங்களை பயன்படுத்த இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.