கோட் படத்தின் முழு விமர்சனம் இதோ..!
கோட் படத்தின் விமர்சனம் வெளியாகி உள்ளது.இந்த படத்தில் அப்பா கேரக்டரில் நடிக்கும் விஜய் தனது நண்பர்களுடன் இணைந்து யாரும் முடிக்க முடியாத மிஷன் மற்றும் வழக்குகளை அதிரடியாக முடிக்கும் வல்லமை கொண்டவராக காணப்படுகின்றார். தீவிரவாதம், அரசாங்கத்தை எதிர்க்கும் வில்லன்களை அழிக்கும் இந்திய பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் ரோவ் ஏஜென்ட் படையில் ஒருவராக காணப்படுகின்றார்.
விஜய் தனது நண்பர்கள் ஆன பிரசாந்த், பிரபுதேவா, அஸ்மல் அமீருடன் இணைந்து வில்லன் படையை எதிர்த்து நின்றார். அந்த சண்டையில் வெற்றி பெற்றதும் வில்லனை அழித்ததாக நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி வருகின்றார்கள்.
இதில் வில்லனாக காணப்பட்ட மைக் மோகன் விஜயுடன் சண்டையிடும் போது விபத்தில் சிக்கி மயக்கம் அடைகின்றார் . ஆனாலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைக்கின்றார். தனது தோல்விக்கு காரணமாக இருந்த விஜய் மற்றும் அவரது நண்பர்களை பழிவாங்க துடித்த மோகன், விஜயின் மூத்த மகனை சிறுவயதிலேயே கடத்தி தன்னுடன் வைத்து வளர்க்கின்றார்.
விஜய் தனது மூத்த மகன் இறந்து விட்டார் என எண்ணியதால் சினேகாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றார். இறுதியில் விஜயின் மகனை கடத்திய மோகன் அவரை தனது மகன் போல வளர்ந்து அப்பா விஜயை எதிர்க்க வைக்கின்றார்.
ஆரம்பத்தில் தனது மகன் கிடைத்து விட்டான் என்ற குஷியில் காந்தி (அப்பா) விஜய் சந்தோஷத்தில் மிதக்க, அதன் பின்பு பல டுவிஸ்ட் மற்றும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அத்துடன் விஜயின் நண்பர்கள் ஒவ்வொருவரும் படிப்படியாக இறக்க, இந்த சூழலில் தன்னையும் தனது குடும்பத்தையும் அப்பா விஜய் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை.
இந்த படத்தில் அதிகமான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. விறுவிறுப்பாக மிரட்டும் காட்சிகளை எடுத்து ரசிகர்களை திகைப்பில் அமர வைத்துள்ளது. மேலும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு நவீன கிராபிக் தொழில்நுட்பம் இபெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது.
எனினும் இந்த படத்தின் நீளம் தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய மைனஸ்சாக காணப்படுகின்றது. எனினும் இந்த படத்தை சமாளிக்கும் வகையில் பல அதிரடி திருப்பங்கள், சண்டை காட்சிகள் மற்றும் மிகப்பெரிய ஜாமவான்களின் தோற்றங்கள் என பல சப்ரைஸ்களை இந்த படத்தில் உள்ளடக்கியுள்ளார் வெங்கட் பிரபு.