2024ல் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களின் பட்டியல் இதோ..!
2024 ல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்த இயக்குனர்கள் யார் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
மாரி செல்வராஜ்
வாழை என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியவர் தான் மாரி செல்வராஜ். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து கண்கலங்காத ரசிகர்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு அழுத்தமாக இப்படத்தை உருவாக்கியிருந்தார் மாரி செல்வராஜ். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. வாழை படத்தின் மூலம் 2024 ல் ரசிகர்கள் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவரானார் மாரி செல்வராஜ்
ராஜ்குமார் பெரியசாமி - அமரன்
எஸ் கே 21 இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்திகேயன், சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
வெங்கட் பிரபு - தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்)
தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் தி கோட் - இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி ஜோசப் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இணைந்து AGS என்டர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தமிழரசன் பச்சமுத்து.
அதைத்தொடர்ந்து தன் முதல் படத்தையே மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்த இயக்குனர் தான் தமிழரசன் பச்சமுத்து. அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் கமர்ஷியலாகவும் அதே சமயத்தில் வித்தியாசமாகவும் இருந்தது. அதன் காரணமாக திரையில் இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. லப்பர் பந்து படத்தை பார்க்கும்போது அறிமுக இயக்குனர் இயக்கிய படம் போலவே இல்லை என்பது தான் அனைவரது கருத்தாகவும் இருந்தது. அந்தளவிற்கு தன் முதல் படத்தையே நேர்த்தியாக கொடுத்திருந்தார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து
பிரேம்குமார்
பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மெய்யழகன். என்னதான் இப்படம் திரையில் எதிர்பார்த்த வெற்றியினை பெறவில்லை என்றாலும் அனைவருக்கும் பிடித்த படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் மிக சிறந்த பீல் குட் படங்களை நாம் வரிசை படுத்தினால் கண்டிப்பாக மெய்யழகன் திரைப்படம் அந்த லிஸ்டில் இருக்கும். அந்தளவிற்கு மிக எதார்த்தமான ஒரு படைப்பை கொடுத்திருக்கின்றார் பிரேம்குமார். என்னதான் திரையில் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு சிறந்த படைப்புகளில் ஒன்றுதான் மெய்யழகன்
நித்திலன்
தமிழ் சினிமாவில் எந்த ஒரு லிஸ்டை எடுத்தாலும் கண்டிப்பாக மகாராஜா திரைப்படம் இடமபெரும். அந்தளவிற்கு இப்படத்தின் வெற்றி அமைந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல் பல விருதுகளையும் தட்டி செல்லும் என தெரிகின்றது. குரங்கு பொம்மை படத்திற்கு பிறகு ஏழு வருடங்கள் கழித்து நித்திலன் மீண்டும் மகாராஜா திரைப்படத்தின் மூலம் களமிறங்கி வெற்றிகண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.