இன்று ஓடிடி-யில் தியேட்டரில் ரிலீசாகும் படங்களின் லிஸ்ட்..!

 

இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள படங்கள் குறித்த முழு லிஸ்ட்டை தற்போது பார்க்கலாம்.

புஷ்பா 2

கடந்த டிசம்பர் மாதம் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியானது 'புஷ்பா 2'. பான் இந்திய அளவில் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், வசூலையும் வாரி குவித்தது. இதனையடுத்து 'புஷ்பா 2' நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருக்கிறது. திரையரங்குகளில் வெளியானதை விட கூடுதலாக 20 நிமிடங்களுக்கும் அதிகமான காட்சிகளுடன் 'புஷ்பா 2' இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகியுள்ளது.

எமக்குத் தொழில் ரொமான்ஸ்

அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம் பெருமாள், எம்.எஸ். பாஸ்கர், பாலாஜி தரணிதரன் நடிப்பில் சமீபத்தில் தியேட்டரில் ரிலீசானது 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'. திரையரங்களில் பெரியளவில் கவனம் பெறாத இப்படம் இந்த வார ஓடிடி ரிலீசாக ஆஹா தளத்தில் ஜனவரி 31 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.


ஐடென்டிட்டி

கிச்சா சுதீப் நடிப்பில் தமிழ், கன்னடம் மொழிகளில் வெளியான படம் ‘மேக்ஸ்’. தற்போது ஜீ5 ஓடிடியில் இந்த வாரம் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் 'மேக்ஸ்' வெளியாக இருக்கிறது. டோவினோ தாமஸ், த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஐடென்டிட்டி’ மலையாள படமான 'ஐடென்டிட்டி' ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. அதே போல் ‘பயாஸ்கோப்’ படம் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது.


பொன் மேன்

தியேட்டர் ரிலீசாக ஆரவ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜபீமா’ தமிழ் படம் நாய் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விவேக் பிரசன்னா, சாக்ஷி அகர்வால் நடித்துள்ள ‘ரிங் ரிங்’ என்ற படமும் நாளை திரையரங்குகளில் ரிலீசாகிறது. மேலும் பாசில் ஜோசஃப், லிஜோ ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மலையாள படமான 'பொன் மேன்' நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.