பாக்கியலட்சுமி சீரியல் முக்கிய நடிகர் திடீர் மரணம்..!!

பாக்கியலட்சுமி இந்தி சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் திடீரென உயிரிழந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

விஜய் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு மிகப்பெரிய பார்வையாளர்கள் வட்டம் உண்டு. ஆனால் இந்த தொடர் பெங்காலியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ரீமோயி என்கிற சீரியலின் ரீமேக்காகும். 

இந்த தொடர் இந்தியிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அனுபமா என்கிற பெயரில் ஒளிபரப்பாகி வரும் தொடர், இந்தியிலும் மிகப்பெரியளவில் ரேடிங்கை குவித்து வருகிறது. அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நிதிஷ் பாண்டே. 

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நிதிஷ் பாண்டே உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து போனதாக மும்பை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அவருடைய உயிரிழப்புக்கு ரசிகர்கள் பலர் இரங்கள் பதிவிட்டு வருகின்றனர்.