ஹோலி கொண்டாட்டம் : ஜொலி ஜொலித்த பிரபலங்களின் புகைப்படங்கள்..!

 

வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை ஹோலி.இதில் மக்கள் அனைவரும் வெள்ளை நிற ஆடை அணிந்து கலர் தூள்களாலும், பல வண்ணங்களில் இருக்கும் தண்ணீர்களையும் தெருவில் ஒருவரை ஒருவர் பூசி மகிழ்ச்சியாக கொண்டாடும் இந்த நிகழ்வை பல சினிமா பிரபலங்கள் கொண்டாடுவதும் வழக்கமான ஒன்றே. 

வசந்த காலத்தின் ஆரம்பத்தை கொண்டாடும் விதமாக நடாத்தப்படும் இந்த ஹோலி பண்டிகை வட இந்தியாவில் மிகவும் ஆரவாரமாக கொண்டாடப்படுகின்றது. 

இந்த நிலையில், இதற்கு வாழ்த்துக்கூறி பல சினிமா பிரபலங்கள் தங்களது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். சில பாலிவுட் நடிகர்கள் தங்கள் குடும்பத்துடன் ஹோலி கொண்டாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். 

அதிலும் குறிப்பாக பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் , கரீனா கபூர் மற்றும் நடிகை சன்னி லியோன் என பலரும் கொண்டாடியுள்ளனர். 

தென்னிந்திய திரைப்படமான "பேமிலி ஸ்டார்" திரைப்படத்தின் ப்ரொமோஷனுக்காக விஜய் தேவர் கொண்டா மற்றும் முறுனல் தாகூர் ஆகியோரும் மேடையில் ஹோலி கொண்டாடியுள்ளனர்.