திரையரங்க ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

 

தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால், தமிழ்நாடு முழுக்க வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்கி உள்ளது. இதற்கு இடையில் சென்னையில் தபால் வாக்குப் பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. 13ஆம் தேதி வரை தபால் வாக்கெடுப்பு சென்னையில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.