பிக்பாஸ் நிகழ்ச்சியை இவரை வைத்து நடத்துங்கள்... ரெக்கமண்ட் செய்த உலக நாயகன்..!   

 

பிக் பாஸ்  8வது சீசனை தொகுத்து வழங்குவது யார் என்ற கேள்வி பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி விஜய் டிவி நிர்வாகத்திற்கு பெரும் சிக்கலாக உள்ளது. இதுகுறித்து பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் ஒரு தொகுப்பாளரை முடிவு செய்ய முடியாமல் பிக்பாஸ் குழு திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரும் பிக் பாஸ் நிர்வாகத்திடம் சில பரிசீலனை சொன்னதாகவும் அதில் சிவகார்த்திகேயன் அல்லது சிம்பு ஆகிய இருவரில் ஒருவர் சரியாக இருப்பார்கள், இவர்களில் யாராவது ஒருவரை தேர்வு செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துங்கள் என்று ரெக்கமண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக சிவகார்த்திகேயனை புக் செய்யுங்கள், அவர் இந்த நிகழ்ச்சிக்கு செட் ஆவார் என்று கமல்ஹாசன் தனிப்பட்ட முறையில் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து விசாரித்தால் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ’அமரன்’ என்ற படம் உருவாகி நிலையில் அந்த படத்திற்கு ஒரு ப்ரோமோஷன் ஆக இருக்கும் என்று கமல் நினைப்பதாக தெரிகிறது.