நான் திரும்ப இன்னும் ஒரு வருடமாகும் என்பதை முற்றிலும் உணர்ந்து விட்டேன் - தொகுப்பாளினி அஞ்சனா!

 
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது தொகுப்பாளர் வேலையை ஆரம்பித்தார் அஞ்சனா. இடையில் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு மகன் ஒருவரும் உள்ளார்.

அஞ்சனா தொகுப்பாளினி வேலையை தாண்டி அதிகம் போட்டோ ஷூட் நடத்துவதில் அக்கறை காட்டி வருகின்றார். அவர் வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

மிஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் 2008 ஆம் ஆண்டு கலந்து கொண்டு வின்னராக வெற்றி பெற்றார். அதன் பிறகு பட்டு டாட் காம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.

இதைத் தொடர்ந்து பாட்டு புதுசு, நம்ம ஸ்டார், கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0, பாக்ஸ் ஆபிஸ், நீங்களும் நாங்களும், நட்சத்திர ஜன்னல், கஃபே டீ ஏரியா, ஜூனியர் சூப்பர் ஸ்டார், சண்டே கொண்டாட்டம், போன்ற பல நிகழ்ச்சிகளை சன் மியூஸிக்கில் தொகுத்து வழங்கினார். 

இந்த நிலையில், எதிர்பாராத விதமாக கீழே விழுந்து இவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது தற்போது சிகிச்சை செய்யும் நிலைக்கு சென்றுள்ளது. இது தொடர்பில் மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ ஒன்றை அஞ்சனா வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு மனதளவில் வீழ்ச்சி அடைந்து விட்டது போல உணர்கின்றேன். உடல் அளவிலும் சோர்ந்து விட்டேன். வீட்டிலும் கவனம் செல்லவில்லை. என்னுடைய வேலைகளும் நின்று போனது ஜிம்மில் எனது முன்னேற்றம் அனைத்து வினானது. நான் குணமடைய ஆறு வாரங்கள் ஆகும். நான் திரும்ப இன்னும் ஒரு வருடமாக என்பதை முற்றிலும் உணர்ந்து விட்டேன். ஆனாலும் எனக்குள் நான் சொல்லிக் கொள்கிறேன் அது சரியாக விடும் இது முடிவல்ல என்று...

தற்போது அஞ்சனாவின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.