நடிகை கஸ்தூரி பிடிபட்டது எப்படி ? வீட்டுப் பணியாளர்களின் சூழ்ச்சியால் சிக்கினாரா..?

 

 'ஆத்தா உன் கோவிலிலே' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் கஸ்தூரி. அதன் பின்பு இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.

தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலம் ஆனார். 60ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், அதிகமாக கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோருடன் நடித்த படங்கள் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தன.

சினிமாவில் ஆர்வம் காட்டிய நடிகை கஸ்தூரி ஒரு கட்டத்தில் அரசியலிலும் நுழைந்தார். சமீபத்தில் இவர் தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்கு உரிய விடயங்களை மேடையில் பேசி இருந்தார்.

இவ்வாறு பேசிய கஸ்தூரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி அவருக்கு எதிராக பல கண்டனக் குரல்களும் எழுவதற்கு காரணம் ஆகின. அதன்பின்பு இந்த பிரச்சினையின் எதிரொலியால் தலைமறைவு ஆகி இருந்தார்.

இந்த நிலையில், நடிகை கஸ்தூரி போலிஸாரால் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சென்னை, ஆந்திரா, டெல்லி என பல இடங்களிலும் கஸ்தூரி தலைமறைவாக இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகத்தினர். இவ்வாறான நிலையில் டெல்லியில் முக்கிய பாஜக பிரமுகர் வீட்டில் கஸ்தூரி இருப்பதாக செய்திகள் வெளியானது.

இதை தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தயாரிப்பாளர் மற்றும் பாஜக பிரமுகர் வீட்டில் கஸ்தூரி இருப்பதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் கஸ்தூரியை பல வழிகளிலும் தேடி அவர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இறுதியில் அவர் தங்கியிருக்கும் வீடும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனாலும் அவர் வீட்டில் இருக்கின்றாரா? இல்லையா? என்பது சந்தேகமாக காணப்பட்டது. இதன் போது கஸ்தூரி வீட்டுக்கு செல்லும் பணியாளர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்திய போது அவர் வீட்டுக்குள் இருப்பதையும் வெளியே செல்லாமல் இருப்பதையும் உறுதி செய்தனர். இதனால் குறித்த வீட்டுக்கு சென்ற காவல்துறை அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

இதையடுத்து தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்துாரி நேற்று கைது செய்யப்பட்டார்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.