"கேம் சேஞ்சர்" படம் எப்படி இருக்கு..! முதல் விமர்சனம் இதோ...!

 

 "கேம் சேஞ்சர்" திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் தொடர்பான முதல் விமர்சனம் டுவிட்டர் தளத்தில் வெளியாகியுள்ளது. இதற்க்கு ரசிகர்கள் அமோகமான வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.

நடிகர் ராம் சரண், நடிகை கியாரா அத்வானி, சுனில், அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், சமுத்திரக்கனி கூட்டணியில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ரசிகர்களிடத்தே அதிகளவு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியாகி ட்ரெண்டான பாடல்களே இதற்க்கு முக்கிய காரணம்.  இப்படத்தின் ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் படம் தொடர்பான விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

படத்தினை பார்த்த நபர் இவ்வாறு தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். " படம் சிறப்பாக வந்துள்ளது.  இயக்குனர் ஷங்கரின் கம் பேக் இதில் தெரியும். மேலும் நடிகர் ராம் சரணின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. பண்டிகை காலத்தில் பார்க்க வேண்டிய தரமான திரைப்படம் கேம் சேஞ்சர் தான்"  என கூறியுள்ளார். இந்த விமர்சனம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.